பொங்கல் பரிசு வாங்க இன்றே கடைசி நாள்: வரிசையில் மக்கள்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (12:28 IST)
தமிழக அரசின் பொங்கல் பரிசை பெறுவதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் மக்கல் பலர் பரிசுகளை பெற நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கொண்ட பையும், ரொக்க தொகையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பை மற்றும் ரொக்கம் கடந்த 9ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பல இடங்களில் தெரு வாரியாக தேதி ஒதுக்கப்பட்டு அரசு அங்காடிகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரையிலும் ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கல் பரிசு இன்னமும் பெறாதவர்கள், கொடுக்கப்பட்ட அன்று வராதவர்கள் உரிய சான்றுகளை காட்டி இன்று பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்