தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 9 மாவட்டங்களுக்கு நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இதனை அடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை அடுத்து வேட்புமனுக்களை திரும்ப பெற 25ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக திமுக உள்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் என்று ஏராளமாக வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.