இந்தநிலையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். காலியான அந்த இடத்துக்கு தான் முருகன் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது மத்தியப் பிரதேசத்தில் இருந்து முருகன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.