தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மூன்று மாநிலங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி முடிவடையும் என்றும் 3 மணிக்கு மேல் வருபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகம் பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய குறைந்து வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே தமிழகத்தில் இதுவரை 234 தொகுதிகளில் சுமார் 4000 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தவுடன் நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு செய்யப்படும் என்றும் வரும் 22ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் செய்ய கடைசி தினம் என்றும் அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது