மருந்து சீட்டில் கேப்பிடல் லட்டரில் தெளிவாக எழுத வேண்டும்: மருத்துவர்களுக்கு உத்தரவு

Siva
வியாழன், 22 பிப்ரவரி 2024 (16:14 IST)
மருத்துவர்கள் எழுதும் மருந்து சீட்டில் உள்ள கையெழுத்து புரிவதில்லை என்று பலர் குற்றம் காட்டியுள்ள நிலையில் தற்போது ஊரக நல பணிகள் இயக்ககம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் மருத்துவர்கள் தங்கள் மருந்து சீட்டில் கேப்பிடல் லெட்டரில் தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
பொதுவாக டாக்டர்கள் மருந்து சீட்டில் எழுதும் கையெழுத்து மருந்து கடைக்காரர்களுக்கே சில சமயம் புரிவதில்லை. இதனால் பல மருந்து கடைகளில் மருந்துகள் மாற்றி கொடுத்துள்ளதாகவும் அதன் காரணமாக நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
 
இது குறித்து அரசின் கவனத்திற்கு வந்த நிலையில் தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த உத்தரவில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருந்து சீட்டில் அவர்களுக்கு தெளிவாக புரியும் படி கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்