”பொன்னி நதி பாக்கணுமா?” 3 நாள் பொன்னியின் செல்வன் சுற்றுலா! – தமிழ்நாடு சுற்றுலாத் துறை!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (11:32 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாடு சுற்றுலா துறை “பொன்னியின் செல்வன்” என்ற சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது.

1950களில் பிரபல நாவலாசிரியர் கல்கி எழுதி வெளியான நாவல் “பொன்னியின் செல்வன்”. 5 பாகங்கள் (2500 பக்கங்கள்) கொண்ட இந்த நாவல் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரபலமான நாயக, நாயகியர் நடிப்பில் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் மக்களுக்கு இந்த நாவல் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. புத்தக விழாக்களில் பலரும் பொன்னியின் செல்வன் நாவலை விரும்பி வாங்கி செல்கின்றனர். வரலாற்று புனைவான பொன்னியின் செல்வனில் சோழ பேரரசரான ராஜராஜ சோழன் குறித்தும், சோழர்களின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பொதுமக்கள் சென்று பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை “பொன்னியின் செல்வன்” என்ற பெயரில் சிறப்பு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரை சோழர்களின் புகழ்பெற்ற இடங்களுக்கு 3 நாட்கள் சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுலாவில் இணைய விருப்பமுள்ளவர்கள் www.ttdconline.com ல் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்