சார்பட்டா பரம்பரையில் நடிக்காதது ஏன்? – கார்த்தி சொன்ன காரணம்!

சனி, 27 ஆகஸ்ட் 2022 (12:25 IST)
பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கார்த்தி “சார்பட்டா பரம்பரை” தான் நடிக்க இருந்த படம் என கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை மணிரத்னம் இரண்டு பாக திரைப்படமாக எடுத்துள்ளார்.

இதற்கான ப்ரோமோஷன் ப்ரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது நடிகர் கார்த்தி “சார்பட்டா பரம்பரை” குறித்து பேசியுள்ளார். அதில் அவர் “மெட்ராஸ் பட வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் சார்பட்டா பரம்பரையில் நடிக்க முடிவானது. 2014லேயே இதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஆனால் அடுத்து சூப்பர் ஸ்டாரின் படங்களை இயக்குவதில் ரஞ்சித் பிஸியாக இருந்தார். பிறகு நான் பொன்னியின் செல்வனில் ஒப்பந்தமானேன்.

பல சூழல்களால் இது நடந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சார்பட்டா பரம்பரையில் ரங்கன் வாத்தியார் மற்றும் டாடி கதாப்பாத்திரங்கள் ரொம்ப பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்