ராஜமௌலியாலதான் ‘பொன்னியின் செல்வன்’ உருவாக்க முடிஞ்சது… இயக்குனர் மணிரத்னம் நன்றி!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (09:23 IST)
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளன. நேற்று இரண்டாவது பாடலான சோழா சோழா பாடல் ஐதராபாத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய்யின் வாரிசு மற்றும் ஷங்கர் இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரித்து வருபவர்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டுக்காக ஐதராபாத் வந்த மணிரத்னம் பேசும் போது “இயக்குனர் ராஜமௌலி பாகுபலி எடுத்து இந்த மாதிரி படங்களுக்கான கதவை திறந்துவிட்டுள்ளார். அவர் இல்லை என்றால் இப்போது எங்களால் பொன்னியின் செல்வன் உருவாக்கி இருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்