ஸ்கோர் செய்யும் அதிமுக; மட்டம் தட்டும் பாஜக? காற்றில் பறக்கும் கூட்டணி தர்மம்!!

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (11:54 IST)
கூட்டணி தர்மத்தை ஓரம் கட்டி அதிமுகவை விமர்சிக்க பாஜகவினருக்கு உரிமையை அளித்துள்ளது பாஜக மேலிம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் காணொலி காட்சி வாயிலாக பாஜக அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், தமிழக பாஜக தலைவர் முருகன் உட்பட 60 பேர் ஆலோசனையில் கலந்துக்கொண்டனர். 
 
அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.  கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என தமிழக பாஜகவினருக்கு, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அறிவுறுத்தினார் என தெரிகிறது. 
 
மேலும் மக்கள் பிரச்னைகளுக்காக, அதிமுகவுக்கு எதிராக, துணிச்சலாக குரல் கொடுங்கள் அதில் தவறில்லை என கூறியதாகவும் தெரிகிறது. இது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எங்களை புகழ மனவராதவர்கள் இகழ மட்டும் முன்வருவது ஏன் என சிந்திக்க துவங்கியுள்ளனர். 
 
மேலும், பாஜகவின் பல முடிவுகளை கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு ஒத்துக்கொண்ட எங்களிடம் இப்போது கூட்டணி தர்மத்தை மறந்து எதிர்க்க முற்படுவது சரியில்லை என்றும் புலம்ப துவங்கியுள்ளனர் சிலர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்