ஆனால் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளால் தற்போது அங்கு எண்ணிக்கைக் குறைய ஆரம்பித்துள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களான மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, தேனி, சேலம், ராணிபேட்டை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.