பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ள நிலையில் மேலும் குறைக்க வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100க்கு மேல் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “8 ஆண்டுகளில் வரியை பல மடங்கு உயர்த்திய ஒன்றிய அரசு தற்போது சிறிதளவு மட்டுமே குறைத்துள்ளது. ஒன்றிய அரசு பல முறை கலால் வரியை உயர்த்தியபோது மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. எனவே மாநிலங்கள் வரியை குறைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமில்லை” என்று தெரிவித்துள்ளார்.