ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் மருத்துவத்திற்கு உதவாது?? – அரசு வழக்கறிஞர் தகவல்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (14:08 IST)
இந்தியாவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்க ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடிவெடுத்துள்ள நிலையில் அது மருத்துவத்திற்கு பயன்படாது என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட்டில் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சிகளும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு மட்டும் அனுமதிக்கலாம் என ஆதரவை தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அடுத்த 4 மாதங்களுக்கு ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் “ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கும் ஆக்ஸிஜனை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது” என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்