நர்ஸ் சீருடை குட்டை பாவடையை மாற்ற தமிழக அரசு முடிவு

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (14:49 IST)
அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் செலிவியர்களுக்கு தற்போது உள்ள சீருடையை மாற்றி புதிய சீருடை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


 

 
அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சீருடை குட்டை பாவடையை அணிந்து வருகின்றனர். அந்த சீருடை அவர்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக நீண்டகாலமாக புகார் தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு மாற்று சீருடை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாதிரி உடை தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் செவிலியர்களுக்கு பேண்ட் மற்றும் சேலை அணியும் வகையும் சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
கூடிய விரைவில் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியர்களுக்கு சீருடை மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்