சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர உள்ளதாக கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. அவரது அரசியல் பிரவேசத்துக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறது.
சமீபத்தில் தனது ரசிகர்களை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தும் விதமாக பல கருத்துக்களை கூறினார். இதனையடுத்து இன்னும் சில மாதங்களில் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரஜினியின் அரசியலுக்கு பின்னால் அவரை லைக்கா நிறுவனம் இருந்து இயக்குவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில காலங்களாக ரஜினி லைக்கா நிறுவனத்துடன் நல்ல நட்புடனே இருந்து வருகிறார். அவர் நடித்துள்ள 2.0 லைக்கா தயாரிப்பில் வர உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் லைக்கா நிறுவனம் இலங்கையில் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து அதனை திறக்க ரஜினியை இலங்கை அழைத்தபோது தமிழகத்தில் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி கடைசியில் அதனை ரஜினி கைவிட்டார்.
இந்நிலையில் சென்னையில் லைக்கா நிறுவனம் கட்டியுள்ள வெஸ்ட் மினிஸ்டர் என்ற மருத்துவமனையை யாருக்கும் தெரியாமல் ரஜினி திறந்து வைத்துள்ளார். சென்ற முறை எதிர்ப்பு ஏற்பட்டதால் அதனை தவிற்க இந்த முறை வெளியில் கசியவிடாமல் இதனை நடத்தி முடித்து விட்டனர். லைக்கா நிறுவனத்தின் மருத்துவமனையை திறந்து வைத்த பின்னரே ரஜினி காலா திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை கிளம்பியுள்ளார்.
சமீப காலமாக லைக்கா நிறுவனம் சென்னையில் வலுவாக காலூன்ற ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அந்த நிறுவனத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்காக தற்போதே ரஜினியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக பேசப்படுகிறது. சென்னையில் பல இடங்களில் லைக்கா நிறுவனம் கட்டுமானத்துறையில் கால்பதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னை சாலி கிராமத்தில் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் பிரம்மாண்டமான அபார்ட்மெண்டை கட்டியுள்ளது லைக்கா நிறுவனம். லைக்காவின் அடுத்த இலக்கு சென்னைதானாம். இந்நிலையில் லைக்காவின் நிகழ்ச்சிகளுக்கு சத்தமில்லாமல் போய் வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் இன்னும் சில மாதங்களில் அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிடும்போது அவரது அரசியல் கட்சியின் செலவுகளை லைக்கா கவனித்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள அரசியல் கட்சிக்கு ஸ்பான்சர் பன்னும் லைக்கா ரஜினியின் அரசியல் கட்சிகும் செலவு செய்ய தயங்காது என பேசப்படுகிறது.
சென்னையை தங்கள் இலக்காக கொண்டுள்ள லைக்கா ரஜினியை ஆதரித்து அதன் மூலம் ஆதயாம் அடைய தற்போதே தனது வேலையை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.