நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலை: முதல்வர் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 10 ஜூலை 2020 (21:44 IST)
நாவலர் நெடுஞ்செழியனுக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலை
நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களை சிறப்பிக்கும் விதமாக அவருக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படுவதுடன், அவரது பிறந்தாநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும், அன்னார் எழுதிய நூலான "வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும்" என்ற நூல் அரசுடைமை ஆக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
 
இதனையொட்டி, நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் மகன் தமதிவாணன் அவர்கள் இன்று முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
முன்னாள் மாநில அமைச்சர் மறைந்த நாவலர் இரா நெடுஞ்செழியன் பிறந்த தினம் நாளை அதாவது ஜூலை 11-ம் நாள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் அமைச்சரவையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்