மீசையோடு சேர்த்து மொட்டையும் அடிக்க தயாரா? சிவி சண்முகத்திற்கு பதிலடி...

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (11:46 IST)
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் வராததற்கு திமுக காரணமா? அதிமுக காரணமா? என இரு கட்சிகலும் மாற்றி மாற்றி குறை கூறி வருகின்றனர். ஆனால், காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு விடிவு கிடைப்பதாக தெரியவில்லை. 
 
இந்நிலையில், நேற்று அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் கூறுகையில் காவிரி பிரச்னையை தீர்க்க திமுக என்ன செய்தது என்பதை ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஏதேனும் ஒரு தகவலை ஸ்டாலின் கூறினால் ஒரு பக்க மீசையை அதிமுகவினர் எடுத்து கொள்வர் என கூறினார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவை சேர்ந்த டிகேஎஸ் இளங்கோவன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, காவிரி விவகாரத்தில் திமுக எடுத்த நடவடிக்கைகளை கூறினால் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒருபக்க மீசை மட்டுமல்ல முழுமையாக மொட்டை அடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த அளவுக்கு அதிமுக தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்