இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதால் அய்யாக்கண்ணுவிற்கு மெரினாவில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில், தமிழக அரசு மெரினாவில் போராட்டம் நடத்த நீதிமன்றத்தில் ஸ்டே ஆடர் வாங்கியது.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்று காவிரிக்காக, தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை மெரினாவில் போராட்டம் நடைபெறப்போவதாக தகவல் வெளியானதையடுத்து, மெரினாவில் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவை சுற்றுயுள்ள ரயில்நிலையங்களிலும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி மெரினா வழியாக செல்லும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.