திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா! - பந்தக்கால் முகூர்த்த விழா தொடங்கியது!

Prasanth Karthick
திங்கள், 23 செப்டம்பர் 2024 (09:39 IST)

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடைபெற்றது.

 

 

ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து வரும் திருக்கார்த்திகை தமிழ்நாட்டில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக சிவாலயங்களில் கார்த்திகை திருநாள் விசேஷமான ஒன்றாகும். இந்நாளில் புகழ்பெற்ற, பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாக் திருக்கோவிலில் ஏற்றப்படும் மகாதீபத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

 

இந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினம் வருகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று திருவண்ணாமலையில் விமரிசையாக நடைபெற்றது.
 

டிசம்பர் 4ம் தேதி அன்று அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 64 அடிய உயரமுள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, அதன்பின் 10 நாட்கள் கோலாகலமாக தீபத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது. சிகர நிகழ்வாக டிசம்பர் 10 அன்று மாடவீதியில் மகா ரத திருவிழாவும், டிசம்பர் 13 அன்று அதிகாலை 4 மணிக்கு கருவறையில் பரணி தீபமும், மாலை தீப மலையில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்