தமிழக பெண் எம்பியை கொலை செய்ய முயற்சி: கணவர் கைது

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (08:51 IST)
திருப்பூர் எம்.பி.சத்யபாமாவை அவரது கணவரே கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பூர் பெண் எம்பி சத்தியபாமா, ஈரோடு அருகே உள்ள கோபிசெட்டிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியபாமா எம்பியை அவரது கணவர் வாசு கத்தியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்பி சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு என்பவர் கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து சத்தியபாமாவின் கணவர் வாசு கைது செய்யப்படுள்ளார். அவர் மீது 294(b), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1990ஆம் ஆண்டு சத்தியபாமாவுக்கும், வாசுக்கும் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாக சத்தியபாமா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இன்று திடீரென அவரது கணவர் வாசு, சத்தியபாமாவை கொலை செய்ய முயற்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்