தேனி மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா, இவரது கணவர் தமிழ்செல்வன் கடந்த 23-ம் தேதி உயிரிழிந்தார். இந்த மரணத்தில் மீனா மீது தமிழ்செல்வனின் சகோதரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் போலீஸிடம் ரகசியமாக புகார் தெரிவித்தனர்.
போலீஸார் மீனாவின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தனர். அதில் போலீசார்க்கு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. மீனாவும் அவரது கள்ளகாதலனான சுரேஷும் தங்களின் ரகசிய உறவுக்கு தமிழ்செல்வன் இடையூராக இருந்ததால் அவரை திட்டம்போட்டு கொலை செய்துள்ளனர். கொலை செய்த பிறகு அவரை மது குடித்து மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். இதனையடுத்து, போலீஸார் மீனாவையும், சுரேஷையும் கைது செய்தனர்.