திருநெல்வேலி-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (08:13 IST)
திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
பகுதியாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்
 
தாம்பரம்-நாகர்கோவில்(வண்டி எண்: 20691) இடையே இரவு 11 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 19-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. 
 
தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். நாகர்கோவில்-தாம்பரம்(20692) இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. 
 
திருநெல்வேலியில் இருந்து மாலை 5.05 மணிக்கு தாம்பரம் நோக்கி புறப்பட்டு செல்லும். திருச்சி-திருவனந்தபுரம்(22627) இடையே காலை 7.20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருநெல்வேலி-திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
திருச்சியில் இருந்து திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தப்புரம்-திருச்சி(22628) இடையே காலை 11.35 மணிக்கு திருவனந்தப்புரத்திலிருந்து புறப்படும் அதிவிரைவு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருவனந்தப்புரம்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது. 
 
திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு திருச்சி புறப்பட்டு செல்லும். சென்னை சென்டிரல்-நாகர்கோவில்(12689) இடையே இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23-ந்தேதி திருநெல்வேலி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுகிறது.
 
நாகர்கோவில்- சென்னை சென்டிரல்(12690) இடையே இரவு 7.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி நாகர்கோவில்-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
திருநெல்வேலியில் இருந்து இரவு 9.30 மணிக்கு சென்னை சென்டிரல் நோக்கி புறப்பட்டு செல்லும். புதுச்சேரி-கன்னியாகுமரி(16861) இடையே மதியம் 12 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி திருநெல்வேலி-கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும். கன்னியாகுமரி-புதுச்சேரி(16862) இடையே மதியம் 1.50 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 26-ந்தேதி கன்னியாகுமரி-திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 
 
திருநெல்வேலியில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புதுச்சேரி நோக்கி புறப்பட்டு செல்லும். இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்