வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய நாய்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (11:51 IST)
தஞ்சை மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை 3 நாய்கள் கடித்து குதறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் என்ற பகுதியில் கூலி தொழிலாளி ரிஸ்வான் அலி என்பவரின் மூன்று வயது மகன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்

அவருடைய அம்மா சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மூன்று நாய்கள் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறியது. இதனை அடுத்து வலியால் அலறி துடித்த சிறுவனை அவரது தாயார் தஸ்லிமா மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தலை மற்றும் கண் பகுதியில் நாய்கள் கடிதத்தில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே சென்னை உள்பட பல பகுதிகளில் நாய் கடித்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் வீட்டுக்குள் புகுந்து நாய்கள் சிறுவனை கடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து நாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற  கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்