அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து: அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (11:43 IST)
சுடுகாட்டு கூரை வழக்கில்  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்  அந்த தண்டனை மேல்முறையீட்டு வழக்கில் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 1991 முதல் 96 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைச்சராக இருந்த அமைச்சர் செல்வகணபதி சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம்  செல்வகணபதி உட்பட ஐந்து பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து செல்வது கணபதி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 இந்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் இருந்து செல்வகணபதி உள்ளிட்டோரை நீதிபதி விடுதலை செய்வதாகவும் உத்தரவிட்டார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்