தெருவில் சுற்றி 93,000 நாய்களுக்கு தடுப்பூசி: சென்னை மாநகராட்சி திட்டம்!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (07:53 IST)
தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன  

கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்பதும் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் கூட்டமாக நாய்கள் கடித்து வருவதால் பொதுமக்கள் பலர் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன  

இந்த நிலையில் நாய்கள் தொல்லைக்கு முடிவு கட்ட தெருவில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

மேலும் தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒருவித வண்ணம் தீட்டவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்