டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

Prasanth K

ஞாயிறு, 27 ஜூலை 2025 (18:08 IST)

உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 21ம் தேதி திடீர் தலைச்சுற்றல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்டவையும் செய்யப்பட்டது.

 

பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்பேரில் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுத்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்தபடியே அலுவல் பணிகளை மேற்பார்வையிட்டார். இன்று அவரது உடல்நலமடைந்துள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

 

ஆனாலும் அடுத்த 3 நாட்களுக்கு வீட்டு ஓய்வில் இருக்கும்படியும், அதற்கு பிறகு வழக்கமான அலுவல்களை மேற்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்