திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழை பதிவு!

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (07:54 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெற்று நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. நேற்று நள்ளிர்வில் இருந்து காலை வரை மிக அதிக கனமழை பெய்தது.

பல இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாகி குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் இன்று நேற்றளவுக்கு மழை இருக்காது என தமிழநாடு வெதர் மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளது ஆறுதலை அளித்துள்ளது.

இந்நிலையில் வட தமிழகத்தில் அதிகபட்ச மழை பெய்த பகுதிகளின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் அதிகபட்சமாக 30 செ.மீ வரை மழை பெய்துள்ளது.  ஆவடியில் 26 செ.மீ மழையும்,  தாமரைப் பாக்கம் மற்றும் பொன்னேரியில் 16 செ.மீ மழையும், கும்முடிப்பூண்டியில் 9.5 செமீ மழையும்,  ஊத்துக்கோட்டையில் 9.3 செமீ மழையும் பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்