இது குறித்து பேசிய டிரம்ப், "சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது. அதனால், அமெரிக்காவும் சில இந்திய பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கும்," என்றும் கூறினார்.
"அவர்கள் எங்களுக்கு வரி விதித்தால், அவர்களுக்கு அதே அளவு வரியை நாங்கள் விதிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் எங்களுக்கு வரி விதிக்கிறார்கள், நாங்கள் வரி விதிக்கிறோம். அனைத்து விதங்களிலும் அவர்கள் எங்களுக்கு வரி விதிப்பதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
பரஸ்பரம் என்ற சொல் மிகவும் முக்கியமானது. "இந்தியா எங்களுக்கு 100% வரி வசூல் செய்தால், நாங்களும் அதேபோல் 100% அவர்களிடம் வரி வசூல் செய்யப்போகிறோம். அவர்கள் ஒரு சைக்கிளை அனுப்புகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு சைக்கிளை அனுப்புகிறோம். எங்களிடம் அவர்கள் 100 % வரி வசூலிக்கின்றனர். அதேபோல நாங்களும் அவர்களிடம் வரி வசூலிப்போம்," என்று அவர் கூறியுள்ளார்.
"இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எங்களிடம் அதிக வரி வசூல் செய்கின்றன, பரவாயில்லை. ஆனால் நாங்களும் அவர்களிடம் அதேபோல் வரி வசூல் செய்யப்போகிறோம்," என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.