அடுத்த மூன்று மணிநேரத்தில் 20 செமீ மழை … அலுவலம் வந்தவர்கள் வீடு திரும்புங்கள் –வெதர்மேன் எச்சரிக்கை!

vinoth

செவ்வாய், 15 அக்டோபர் 2024 (15:13 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதலே பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது. மழை நீர் வெளியேற அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் பல பகுதிகளில் குப்பை அடைத்துள்ளதால் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் சாலைகள் வெள்ளக்காட்சியாக உள்ளது. மேலும் சில இடங்களில் வடிகால் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணிநேரத்துக்கு அதீத கனமழை பெய்யும் என்றும் அதனால் அலுவலகம் வந்தவர்கள் முன்கூட்டியே வீடு திரும்புங்கள் என்றும் வானிலை செய்திகளை தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இன்றிரவுக்குள் சுமார் 20 செமீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்