பாஜகவினர்களை கைது செய்யுங்கள்; திருமாவளவன் வலியுறுத்தல்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (09:06 IST)
நேற்று கோயம்பேடு பகுதியில் பாஜகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் பாஜகவினர்களை கைது செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார் 
 
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக கொடி கீழே விழுந்ததால் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என கூச்சலிட்டு திடீரென வன்முறையில் ஈடுபட்டதாகவும் விடுதலை சிறுத்தைகள் கொடிகளை பிடுங்கி எறிந்ததாகவும் எனவே வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்