தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்தியது யார்? திருமா சர்ச்சை கேள்வி?

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (14:50 IST)
கடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து பேசுகையில், தூத்துக்குடி சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மீண்டும் அதனை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதில் மத்திய அரசின் தலையீடு உள்ளது. 
 
துப்பாக்கிச்சூட்டின் போது நீல மற்றும் மஞ்சள் நிற உடையில் இருந்தவர்கள் காவல்துறையினரா அல்லது ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர் அனில் அகர்வாலின் அடியாட்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் இந்த கேள்வி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்