ஈசான மூலையில் வைக்கக்கூடாத பொருட்கள் இவை!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (00:20 IST)
ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகலசௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். ஈசான மூலையில் பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, படுக்கையறை, வயதுமுதிர்ந்தவர்களின் படுக்கையறைகளை அமைக்கலாம். ஈசான மூலையை அடைப்பதுபோல் நிலைப்பேழை வைக்கக்கூடாது.
 
அம்மி, ஆட்டுக்கல், விறகு சுமை, தேவையற்ற பழைய பொருட்களையும் அடைத்து வைக்கலாகாது. வீட்டின் பிரதான ஈசான மூலையில் கழிப்பறை, குளியலறை, செப்டிக்டேங்க், துணிதுவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது. பரணில் ஈசான மூலையில் பொருட்களை  வைக்கக்கூடாது. 
 
வீட்டின் ஈசான மூலை கீழ்நிலைத் தொட்டி, கிணறு போன்றவை அமைக்க வேண்டிய இடம், ஈசான மூலையில் நீரோட்டம் இல்லாத போது,  தென்மேற்கு, தென்கிழக்கு தவிர்த்து கிணறு தோண்டவும், பிறகு ஈசான மூலையில் கீழ்நிலைத் தொட்டி அமைக்கவும். வடகிழக்கு மற்றும்  வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக் கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போதும்.
 
பூஜை பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்க கூடாது. அப்படி வைத்தால் அது  மன அழுத்தத்தை தரும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்