செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அதாவது நாளை முதல் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பதும் இதற்கான விண்ணப்பம் பெறும் நடைமுறைகள் முடிந்து பணம் அனுப்பும் பணிகளுக்கான வேலைகள் நடந்து வந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நாளை முதல்தான் பணம் வரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சில மகளிர்களுக்கு இன்று பணம் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தின் பல்வேறு தாலுகாக்களில் குடும்ப தலைவிகளுக்கு முன்கூட்டியே மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெற்றதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுடைய செல்போனுக்கு ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது