இன்று முதல் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:18 IST)
இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு அதாவது இருபதாம் தேதி வரை இடி மின்னலோடு கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் 20 ஆம் தேதி வரை மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்  
 
ஏற்கனவே நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்