முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணின் நகையை திருடிய திருடன்

Webdunia
வெள்ளி, 26 ஜனவரி 2018 (07:23 IST)
ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்ட முன்னாள் காதலி என நினைத்து வேறொரு பெண்ணை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச்சங்கிலியை திருடியுள்ளான்

கடந்த 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செல்வகணேஷ் என்பவரது மனைவி குணசுந்தரி என்பவர் தனியாக வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் 11 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துவிட்டு தப்பினார். இதுகுறித்து சிசிடிவி கேமிராவில் பதிவான திருடனின் முகத்தை வைத்து போலிசார் விசாரணை செய்ததில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன் என்பது தெரியவந்தது

பின்னர் ஜான்சன் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டபோது தன்னுடைய காதலி என நினைத்து ஆள்மாறி செயினை திருடிவிட்டதாக கூறினான். மேலும் திருடிய தங்கசெயினை அந்த திருடன் ப்ரேம் போட்டு தனது வீட்டின் சுவரில் மாட்டியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திருடனிடம் மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்