அரியலூர் மாவட்டம் சாலையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மகள் ஆனந்தி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் பாஸ்கரை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பாஸ்கர், ஆனந்தியிடம் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பாஸ்கர் ஆனந்தியிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால் மனமுடைந்த ஆனந்தி, தன்னை ஏமாற்றிய பாஸ்கர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதன் பேரில் போலீஸார் பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த பாஸ்கர் ஆனந்தியிடம் சென்று, என்னை சிறைக்கு அனுப்பிய உன்னைக் கொன்றுவிடுவேன் என்றும் உன் கண்முன்னாடியே உன் அப்பாவை வெட்டுவேன். இதோடு மட்டுமல்லாமல் உங்க குடும்பத்தை அழிக்கிறேன் பாக்குறியா என மிரட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்து விஷமருந்திய ஆனந்தியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.