ஜோசியம் பார்ப்பதாக ஏமாற்றி 8 லட்சம் ரொக்கம் திருட்டு! – மதுரையை கலக்கிய திருட்டு பெண்கள்!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (16:22 IST)
ஜோதிடம் பார்ப்பது போன்று நடித்து சிறுமியை ஏமாற்றி வீட்டில் இருந்த 8 லட்சம் ரொக்கம், 10 பவுன் தங்க நகையை பெண்கள் திருடிச் சென்ற வழக்கு தொடர்பாக - 3 பெண்களை கடலூர் சிறையிலிருந்து பிணையில் அழைத்து வந்து  நீதிமன்றத்தில் போலிசார் ஆஜர் படுத்தினர்.,


 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த போதுராஜ் என்பவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஜோதிடம் பார்ப்பது போன்று நடித்து வீட்டில் இருந்த சிறுமியை ஏமாற்றி வீட்டின் பிரோவில் இருந்த 8 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை 4 பெண்கள் திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படை 4 பெண்களையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் வேறு ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் சிறைக் கைதிகளாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலிசார் கடலூர் சிறையிலிருந்த 4 பெண்களில் ஈரோட்டைச் சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி என்ற மூன்று பெண்களை பிணையில் அழைத்து வந்து உசிலம்பட்டியில் நடைபெற்ற திருட்டு வழக்கு தொடர்பாக, உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜனிடம் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் மூவரையும் மீண்டும் கடலூர் சிறைக்கு போலிசார் அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்