மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்குட்பட்ட எஸ்.கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருக்மணி என்பவரது பூட்டியிருந்த வீட்டில் கடந்த மாதம் 16ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த ( 20 1/2 ) இருபதரை பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக பேரையூர் காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து டிஎஸ்பி இலக்கியா தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.
மேலும் பேரையூர், டி.கல்லுப்பட்டி, சித்திரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.