69 அடியை எட்டிய வைகை அணை: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதன், 8 நவம்பர் 2023 (08:03 IST)
வைகை அணையில் 69 அடி நீர்மட்டம் எட்டியதை அடுத்து ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வைகை அணையின் முழு கொள்ளளவு 71 அடி என்ற நிலையில் தற்போது 69 அடியாக வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மதுரை மற்றும் தென்  மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததன் காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. '

இதையடுத்து தற்போது 69 அடி என்ற நிலையில் உபரி நீர் அதிகமாக திறந்து விடப்படுவதால் வைகை கரையில் உள்ள ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி, ராமநாதபுரம்,  திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீரின் வரத்திற்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நீர்வளத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்