மதுரை அவனியாபுரம் அருகே உள்ள அயன் பாப்பாக்குடி கண்மாய் மறுகால் பாயும் தண்ணீரில் கழிவு நீர் கலந்து கடந்த ஐந்து தினங்களுக்கு மேல் மலை போல் எழும்பி பொங்கி வரும் நுரை காற்றில் கலந்து அவனியாபுரம் - விமானநிலைய சாலையில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வந்த நிலையில். கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் மறுகால் பாயும் போது ஏற்படும் வெண்ணிற நுரை காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.