கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள் யார் யார்?

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (08:16 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 30ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 'தெற்கில் உதித்தெழுந்த சூரியன்' என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைத்து திமுக பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய தலைவர்களும், பிற மாநில தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என்பதை தற்போது பார்ப்போம்
 
1.அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் மற்றும் பாராளுமன்ற எம்பி
2. குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
3. தேவகவுடா முன்னாள் இந்திய பிரதமர்
4. சரத்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர்
5. சந்திரபாபு நாயுடு, ஆந்திர முதலமைச்சர் 
6. நிதிஷ்குமார், பிஹார் முதலமைச்சர் 
7. அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர் 
8. பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்
9. நாராயணசாமி புதுச்சேரி மாநில முதலமைச்சர் 
10. சீதாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர்
11. டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் 
12. கே.எம். காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  தலைவர் 
13. டெரிக் ஓ பிரையன்  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. 
 
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தாலும் அமித்ஷா இதுகுறித்து எந்த கருத்தையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்