சூடானில் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி - உள்நாட்டு போர் தீவிரம் !

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (22:12 IST)
சூடானில் இருதரப்பினர் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.
 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு உள்நாட்டு போர் மூண்டுள்ளதை அடுத்து அங்குள்ள அமெரிக்கர்கள், இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் அந்த நாட்டில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்காக இரு தரப்பினர் இடையே போர் நிறுத்த  ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டுஎன்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. இதையடுத்து, இரு ராணுவ தளபதிகளும் சவூதி அரேபியாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால், இருதரப்பினர் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

இதனால், அப்பாவி மக்கள் கடும் பாதிப்பை சந்திந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்