காட்டுக்குள் உல்லாசம்..! தேடி வந்த கணவன் ஷாக்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்!

Prasanth K

புதன், 23 ஜூலை 2025 (09:56 IST)

கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவன் பார்த்து விட்டதால் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மனைவி நாகம்மா. அதேபகுதியில் கூலி வேலை பார்த்து வந்தவர் மாதேஷ். கடந்த சில காலம் முன்பாக மாதேஷுக்கும், நாகம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் சில நாட்கள் முன்பு மாதேஷூம், நாக்கம்மாவும் வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவியை தேடிச் சென்ற நாகப்பன் அவர்கள் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட, கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் நாகம்மாவை மாதப்பன் வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் அதனால் நாகம்மா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

 

தாயார் வீட்டில் வசித்து வந்த நாகம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாயமாகியுள்ளார். அவரை காணவில்லை என போலீஸில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அதேசமயம் நாகம்மாவின் கள்ளக்காதலனான மாதேஷும் சில நாட்களாக காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தொட்டமஞ்சி கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருவரது உடலும் வெவ்வேறு இடங்களில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்களது உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்