இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், அங்கு அவர் கையெழுத்திடும் வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக பங்குச்சந்தை மேலும் உயரலாம் என்றும், அடுத்த சில நாட்களில் சந்தை உச்சத்திற்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 155 புள்ளிகள் உயர்ந்து 83,083 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 25,120 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, மாருதி சுசுகி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி பங்குகளின் விலைகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், சன் பார்மா, ஸ்டேட் வங்கி ஆஃப் இந்தியா, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலீவர், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டாக்டர் ரெட்டி லேப்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட சில பங்குகளின் விலைகள் சரிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.