கூட்டணி ஆட்சியை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.. சர்ச்சையை ஆரம்பித்த செல்வப்பெருந்தகை..!

Mahendran

புதன், 23 ஜூலை 2025 (10:13 IST)
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர் என்றும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போதெல்லாம் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருக்கிறோம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பேசி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இது குறித்து பேசவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, "இது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
 
ஆனால், அதே நேரத்தில், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு விருப்பம் இருக்கிறது" என்றும், "காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடமும் இந்த விருப்பம் நிலவுகிறது" என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, "அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து பாருங்கள்" என்று அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்