ஒரே வாரத்தில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு..!

Siva

புதன், 23 ஜூலை 2025 (09:52 IST)
கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ரூ.95-ம், ஒரு சவரன் ரூ.760-ம் உயர்ந்திருப்பது தங்க நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.75,000 ஐ கடந்து உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நகை வியாபாரிகள் இன்னும் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பொருளாதார நிச்சயமற்ற தன்மை, முதலீட்டாளர்களின் பாதுகாப்புத் தேடல் போன்ற காரணிகள் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
தங்கம் போலவே வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு 1000 ரூபாய் என்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,285
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,380
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,280
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 75,040
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,129
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,232
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,032
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,856
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.129.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.129,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்