கோழிச் சில்லியில் குருணை மருந்தை கலந்து கொடுத்த கொடூரம்! துடிதுடித்து இறந்த நாய், பூனைகள்..

J.Durai
செவ்வாய், 2 ஜூலை 2024 (10:05 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பழந்தணிப்பட்டி அருகே தச்சங்காடு பகுதி உள்ளது. 
 
இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  
 
குமரவேல் என்பவருக்கு சொந்தமான 3 வயது நாயை சங்கிலியால் கட்டப்பட்டு தனது வீட்டின் முன்பு கட்டி இருந்தார்.  அதேபோல் இதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பதற்கு சொந்தமான இரண்டு பூனைகளும் உள்ளது.
 
இந்நிலையில், நள்ளிரவில் குமரவேல் என்பவரின் வீட்டுக்கு முன்பு கட்டி இருந்த நாயைச் சுற்றிலும் குருணை மருந்தை கோழி சில்லியில் கலந்து  போட்டுள்ளனர்.
 
இதனை சாப்பிட்ட மூன்று வயதனாய் நாய் துடிதுடித்து இறந்தது. அதேபோல் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான இரண்டு பூனைகளும் குருணை மருந்து கலந்த கோழி சில்லியை திண்று உயிரிழந்தது.  
 
இந்த சாலையில் சிறுவர்கள் பலரும் விளையாடி வரும் நிலையில்,இது போன்ற கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கூறி  வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். 
 
இச்சம்வம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாய் மற்றும் பூனைக்கு கோழி சில்லியில் குருணை மருந்தை கொடுத்து நாய் மற்றும் பூனைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்