சட்டசபையில் குட்கா கொண்டு சென்ற வழக்கு.! இந்த தேதியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

Senthil Velan
திங்கள், 29 ஜூலை 2024 (14:15 IST)
திமுக எம்.எல்.ஏக்கள், சட்டசபைக்குள் குட்கா கொண்டு சென்ற வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
 
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு உரிமை மீறல் நோட்டீஸை அனுப்பியது. 
 
இந்த நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ALSO READ: ஹேமந்த் சோரனின் ஜாமீனுக்கு எதிராக ED மனு.! தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!
 
இந்த  வழக்குகள்  நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்