தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா! – அதிகரித்த எண்ணிக்கை!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (08:55 IST)
தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 15 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 கல்லூரிகளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்