தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதால் திமுகவினரே அதிருப்தி அடைந்த நிலையில் தான் தவறாக பேசவில்லை என ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ஆ.ராசா சமீபத்திய பிரச்சாரம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திமுக எம்.பி கனிமொழி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பெயர் குறிப்பிடாமல் ஆ.ராசாவை கண்டிக்கும் வண்ணம் பதிவிட்டனர்.
இந்நிலையில் தான் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை என்றும், தான் ஒரு ஒப்புமைக்காக பேசியதை வெட்டி ஒட்டி திரித்துள்ளதாகவும் கூறியுள்ள ஆ.ராசா தவறான புரிதலுக்கு தான் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.