பாஜகவை கிண்டல் செய்த தம்பிதுரை ; உறவில் விரிசல்? - வீடியோ

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (16:01 IST)
தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள்தான் நிலைத்து நிற்கும் எனவும் தேசிய கட்சிகள் இங்கு காலூன்ற முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
டெல்லி மட்ட அரசியல் கட்சியின் தலைவராக இருக்க தகுதி படைத்தவர் என்றெல்லாம் திறமைகள் பல வாய்ந்த மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பித்துரை, கடந்த சில வருடங்களாகவே, ஏதோ பேசி சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சைக்குரியவர் என்றெல்லாம், பெயர் பெற்றவர் என்றே கூறலாம், அதே போல தான் சமீபத்தில் கரூர் அருகே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசையும் ஏற்கனவே ஆண்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியையும் ஏதோ சாடி பேசியுள்ளார்.
 
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி, புஞ்செய்புகழூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 10 இடங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டதோடு, அதே பகுதிகளில் சாலைபணிகளுக்காகவும், மேம்படுத்தும் பணிகளுக்காகவும், பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளருமான டாக்டர் மு.தம்பித்துரை பேசியபோது “தேசிய கட்சிகள் தான், நாட்டை வளம்பெற செய்தது போலவும், திராவிட கட்சிகள் எதுவும் செய்யாதது போல, ஒரு மாயையையும், தோற்றத்தையும் தமிழகத்தில் பேசி வருகின்றனர். திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு தான், தமிழக மக்களுக்கு சாப்பிட இலவச அரசியே கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில், அரிசிக்கு பஞ்சம் ஏற்பட்டு, ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. 
 
நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்கள் அனைத்தும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் தான், கிடைத்தது. மக்களுக்காக, மக்களை சந்தித்து பாடுபடும் இயக்கம் திராவிட இயக்கம், தமிழகத்தில் நான்கு வழி சாலைகள் அனைத்தும் நடந்தது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான்.  நம் அனைவரும் திராவிடர்கள், நமது நாடு திராவிட நாடு, தமிழர்கள் நாடு, தமிழர்கள் என்ற உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” எனப் பேசினார்.
- சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்